About

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

வணக்கம் தோழமைகளே!

யுவனிகாவாகிய நான் நிகரில்லா வானவில் குழுமத்தின் சார்பாக அதன் நிர்வாகி என்ற முறையில் என்னுடைய தளத்திற்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என  வரவேற்கிறேன். கனவிலும் நான் நினைத்துப் பார்க்கவில்லை உங்கள் முன் ஒரு எழுத்தாளராக வந்து இப்படி பேசுவேன் என்று. எனக்கு இந்த இடத்தைத் தந்த ஆயிரக்கணக்கான வாசக நெஞ்சங்கள் அனைத்துக்கும் கோடி நன்றிகள் சொன்னாலும் நிகராகாது. உங்கள் அன்பும் ஆதரவுமே எனக்கு எனக்கு என்றும் நிகரில்லா பரிசு!

  1. இதை அமைக்க என்னுடன் உறுதுணையாக இருந்த என் நண்பர்கள் அவர்களுக்கும் நான் இங்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்..
  2.  
  3. உண்மையில் நான் பிறந்த இந்த சமூகத்தில் என் பெயரை சிறு கடுகாக பதிக்க நினைத்தேன்… அதற்கான முதல் அடியே இந்த நிகரில்லா வானவில் தளம். ஆம்! பெண்கள் தானே அனைத்திற்கும் ஆதாரம்? அதனாலேயே வானவில் வர்ணஜாலங்களாய் அவர்கள்  தங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் திறமையை வெளிக்கொணர நினைத்த என்னுடைய எண்ணத்தின் வெளிப்பாடே இந்த “நிகரில்லா வானவில்” தளம்!
  4.  
  5. எனக்கு இது நெகிழ்ச்சியான தருணம். ஏனெனில் உலகின் ஏதோ ஒரு மூலையில் வசிக்கும் ஒரு சகோதரி என்னுடைய தளம் வாயிலாக தன்னை என்னுடன் இணைத்துக் கொள்வது ஆனந்தம் கலந்த ஆச்சர்யமே! 
  6. முதலில் இதில் கதை, கவிதை, தையல், சமையல், ஓவியம்… இன்னும் பலப்பல துறைகளில் மிளிரத் துடிக்கும் சகோதரிகளுக்கு இங்கு உதவும் வகையில் இந்த தளம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. 
  7.  
  8. மேற்கொண்டு இதை இன்னும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். அதாவது உங்களுடைய படைப்புகளை சந்தைப்படுத்துவது, உங்களுடைய தகுதிகள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பது, படிப்பு சம்பந்தப்பட்ட விபரங்களை வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது, ரத்த தானம் தேவைப்பட்டாலும் அதற்கான உதவியை அந்தந்த ஊரில் உடனடியாக செய்வது… இன்னும் பலப்பல வேலைகள் செய்ய ஆர்வமாயிருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த ஆலோசனைகளையும் தயக்கமின்றி என்னிடம் பகிருங்கள். அதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன். 
  9.  
  10. ஆனால் இதையெல்லாம் தனியொருத்தியாக நான் செய்வது சாத்தியமல்ல. அதற்கே உங்களுடன் கைகோர்த்துள்ளேன். உங்களுடைய உதவியால் தான் நான் இதைக் கட்டமைக்க இயலும். அதை நான் செய்து முடிக்கும் நாளே இந்த தளத்தின் குறிக்கோள் பூர்த்தியாகும் நாள்! அப்படிப்பட்ட நாளை எதிர்நோக்கியே நான் பயணிக்கிறேன். வாருங்கள்! நீங்களும் என்னுடன் கைகோர்த்து அதை சாத்தியமாக்கும் இந்த பயணத்தில் வானவில்லின் வர்ணஜாலங்களாய் பயணிக்க…
  11. என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் நாடும்
  12. உங்கள் யுவனிகா!

Writers Reviews

சிதறிக்கிடக்கும் வைரங்களை தேடிப்பிடித்து ஜொலிக்கச்செய்யும் கொல்லனாக பரவிக்கிடக்கும் படைப்புக்களை பதப்படுத்தி பட்டை தீட்டி காட்சிப்படுத்தும் உன் சேவை கொண்டாடப்பட வேண்டியதே.. இதுவே எங்கள் நிகரில்லா வானவில் குடும்பம்...
Anu chandhiran
Writer
கற்பனை சாயத்தில் வாழ்வியல் சாந்தினை குழைத்து தூரிகைகளின் தூவல்களில் எழுத்துகளை ஓவியமாக்கும் நிகரில்லா வானவில்லின் வர்ண ஜாலங்கள்....
Dhanu
Writer
எழுத்திற்க்கு உயிர் கொடுப்பவன் ... எண்ணங்களின் உணர்வுகளை வார்த்தையால் வடிப்பவன் ... கண்கள் தவறிய காட்சிகளை எழுத்துக்களால் சித்தரிப்பவன் ... கற்பனை யுகத்தில் கொடிகட்டி பறப்பவன் ... எழுத்தாளரின் ஆசான் அவனின் பேனா முனையில் தோன்றும் எழுத்துக்களே எங்கள் நிகரில்லா வானவில்லின் பக்கங்கள்...
Salmasasikumar
Writer